Sunday, May 9, 2010

தலைப்பு செய்தி

தலைப்பு செய்தி

புலிக்கு இருவர் பலி

என படித்த

பின்பு தான்

தெரிந்து கொண்டேன்

கடை புளிக்கு

பலியான

என் கவிதைகளின்

வலியை .......


கடல் அலைகள்

அவள் வருகையை அறிந்து

ஆர்பரித்த

கடல் அலைகள்

அவள் பாத சுவடுகளை

கலைக்க மனம் இல்லாமல்

கரைந்து சென்றன .....

அனிச்சை செயல்

நீ எதிரே

வந்தபோது

என் குரல்

உயர்ந்து செல்வதும்

நீ என்னை கடந்து

சென்ற பின்

குறைந்து போவதும்

அனிச்சை செயல்

என

அப்போதுதான் தெரிந்து கொண்டேன்

தெரியாமலே

உனக்காக
எழுதப்பட்டன
என தெரியாமலே
அதனை
படித்தும் சென்றாய்
நான் எழுதி வைத்து சென்ற
உனக்கான
என் கவிதைகளை !!!

பைத்தியம்

குழந்தையின்

பிதற்றலை

மழலை

என்றாய்

என்னை மட்டும்

என் பைத்தியம்

என்றாய்

பெண்ணே ?

பனிப்போர்

உன் இதழுக்கும்

உன் இமைக்கும்

ஏன் இந்த பனிப்போர் ?

இமைகளால் என்னை

அழைத்துவிட்டு

இதழ்களால்

என்னை

மறுக்கிறாய்

நீதான்

காற்றின்

ஈரப்பதம்

கதிரவனால்

குறைந்தாலும்

என்

கற்பனைகளுக்கான

நீருற்று

நீதான்

தேடி பிடித்தல் விளையாட்டு

தேடி

பிடித்தல்

விளையாட்டு

பிடிக்கும் என்றாய்

ஆட்டம்

தொடங்கியது

விளையாட்டாய்

நான்

தேடுவதாய்

நடித்து கொண்டிருந்தேன்

நீயோ

உண்மையிலே

மறைந்து

நின்றாய்

பதைத்து

நின்றேன்

சில

நிமிடங்கள்

அதையும்

ரசித்து

நின்றாய்

மறைந்து

கொண்டு

விளையாட்டே

வினையாகி போனது

எனக்கு

நீயும்

விட்டு கொடுப்பதாய்

இல்லை

நான் சோர்ந்த போதும்

உன்

அருகில்

இருந்தும்

என்னை

அலைய வைத்தாய்

சில நேரம்

அழுதும் நின்றேன்

மனதுக்குள்ளே

என்

அலறல்கள் அறிந்து

வெளியே வந்தாய்

போதும் இந்த

கண்ணாமூச்சி

ஆட்டங்கள்

என

கடிந்து கொண்டதும்

சுருங்கி போனாய்

உன்

மௌனம்

எனும்

அஹிம்சையால்

எனை

தண்டித்தாய்

இறுதியில்

உன் அஹிம்சா போராட்டத்தில்

வெற்றியும் கண்டாய்

இனி

போராட்டம் உனக்கல்ல

எனக்குத்தான்

மீண்டும்

நீ

மறைதலில்

மீண்டும்

நான் உன்

தேடலில்

முன்னுறு நாட்கள்

முன்னுறு நாட்கள்

எனக்காகவும்

சுவாசித்தாய்

எனக்காகவும்

உணவுண்டாய்

உனக்கென

ஏதும் செய்யாமல்

எனக்காக

புது வாழ்வு வாழ்ந்தாய்

கர்ப்பக் கிரகத்து

கடைசி

நிமிடங்கள்

எனக்கு

இது போல்

மீண்டும் ஓர்

இடம் இல்லை

என அழுது பிறந்தேன்

நீயோ

இறந்து

பிறந்தாய்

மீண்டும்

புதியவளாய்

நான்

வளர்கையில்

நீ

குழந்தை

ஆனாய்

அதிகாலையே

நான்

விழித்துகொண்டாலும்

உன் அர்ச்சனைகள்

கேட்காமல் எனக்கு

விடிந்தது இல்லை

உன் கைபட்ட

பின் தான்

அன்னம் அமிர்தம்

ஆகிறது

என

பொய் சொல்லி

உன்னை

பூரிப்பில் ஆழ்த்துவேன்

நீயோ

அலட்டிகொள்ளதவளாய்

சிறு புன்னகையை

விட்டு சென்றிடுவாய்

முதல் முறையாய்

நெடும்பயணம்

என

தயார் ஆன போது

காற்றில் இருந்த ஈரப்பதம்

எல்லாம் உறிஞ்சி

உன்

கண்ணீராய் கொண்டாய்

நெடும் பயணத்து

விக்கல்களில்

உன்னை எனக்கு

நினைவுட்டினாய்

ஆறு

அடி

தூரத்திலேயே

எனது

பல நாள் பசியை

உன் கண்களால்

அளந்து விட்டாய்

அருகில்

வந்ததும்

எதிர்பாராத

செல்ல அறைகளால்

என்னை அரவணைத்தாய்

மீண்டும் ஓர்

பயணத்துக்கு

வேண்டி நின்றேன்

இறைவன் இடத்தே

அன்றைய

இரவே

பஞ்சு மெத்தையாய்

உன் மடியினிலே

ஐந்தே நிமிடங்களில்

உறக்கத்தில் கலந்தேன்

உன் செல்ல கோதலில்

என் கேசத்துடன்

விடியும் வரை

விழித்து இருந்தாய்

நான்

உன் மடியில்

உறங்குகிறேன் என

எனக்காக எல்லாம்

செய்தாய்

என்னிடம் எதையும்

எதிர் பாராமல்

உனக்காக என்னிடத்து

இந்த

பிரார்த்தனைகள் மட்டுமே தரமுடியும்

இறைவனிடத்தே

என்றும் இவளை

நீக்கி

விடாதே என்னிடத்து

என் அன்பு தாய் அவளை

என் சி(ற) வந்தவளே.

நீ

பிரிந்து

செல்லும் கணம்

ஏன் பார்வை

பறி போனதாய்

உணர்ந்து நின்றேன்

நீ

எதையும்

கொடுத்து செல்லவில்லை

எடுத்து மட்டும் சென்றாய்

என் இதயத்தை

தேடி தேடி

உன் பிரிவை

தெரிவித்தாய்

உன்

உற்றோருக்கு

உன் அருகிலேயே

இருந்த

என்னை மட்டும் ஏன்?

தொலைத்து நின்றாய்

விழி ததும்ப

கண்ணீருடன்

காத்து நின்றனர்

உன் பிரிவுக்கு

நானும் நின்றேன்

அழுது கொண்டே

சத்தமில்லாமல்

இது தான் கடைசி

தருணம்

என தெரிந்து இருந்தும்

சொல்ல முடியாமல்

தவித்து இருந்தேன்

வந்தும் சேர்ந்தது

உன் பிரிவின்

கடைசி நொடி

காய்ந்து விடும்

கண்ணீரால்

விடை கொடுத்தனர்

உன் தோழியர்

ஆறாக்காயத்துடன்

வெடித்து சிவந்து நின்றேன்

நான்

உனக்காக

என் சி(ற) வந்தவளே.